Showing posts with label என்னைப் பற்றி. Show all posts
Showing posts with label என்னைப் பற்றி. Show all posts

Thursday, September 22, 2011

என் பயணம்

நான் என்னைப் பற்றி
பொதுவாக இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆனால், இன்று என்னைப் பற்றி.

நான் பிறந்தது மதுரையில்,
வழர்ந்தது ஈரோட்டில் பத்தாவது  வரை படித்தேன்.
அதன் பிறகு வெல்டிங் வேலையை கற்றுக்கொண்டேன்.
 சில காலம் ஈரோட்டில்  பணி செய்து கொண்டிருக்கையில்,
கோவையில் ஜீவா
என்ற நண்பன் அழைத்ததால் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தேன்.
[வீடு க்ட்ட உதவும் மிசின்கள்]
அங்கு  வேலையை கற்றுக்கொண்டு பிறகு அருகில் வேறு கம்பெனியில்
நனும், ஜீவாவும் காண்டிராக்ட் எடுத்துப் பணி செய்தோம்.
[கடந்த ஒரு வருட காலமாக]
நல்ல பணம் சம்பாதித்தும்.சில குறைகள் இருந்து கொண்டிருந்தன.
பிறகு அப்பணியிலிருந்து விழகி இப்போதைய நிலவரப்படி
கேரளாவில் திருச்சூர்- கேச்சேரியில் ஒரு வாரமாக வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். இந்த ஊரினைப் பிடித்தாலும்
வீட்டிலிருந்து வெகுத் தொலைவில் இருப்பதால் கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளது.
என்னைப் பற்றி சுருக்கமாக உங்களிம் கூறி ஆருதல்
அடைகின்றேன்.
[உங்களுக்கும் தலைவலிக்குதா? sorry...]