Monday, September 1, 2014

அவசர எண்கள் பதிவது எந்த பெயரில் பதிவது?

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும்,
மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.

ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.

ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது..

இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர்.

இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc
எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம்.

இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

Saturday, August 30, 2014

PHOTO

மீண்டும் உங்களுடன் இணைகிறேன். இனி பேஸ்புக், டிவிட்டர், செய்திகள்  மற்ற பதிவுகள் பகிற்தல் இடம்பெறும்!

Monday, March 26, 2012

தூக்கம் ரொம்ப அவசியம்



  






நம்ம மாநிலத்தலைவரப் பாருங்க எப்படி போஸ்கொடுத்துகிட்டே தூங்குறாரு.?
(வேரொரு வலையில் சிக்கியது )

Wednesday, October 19, 2011

உலக நாடுகள் பொருளாதாரத்தி மாபெரும் சரிவடைந்துள்ளது

             இதைப் பேசுகின்ற அளவிற்கு எனக்கு பொருளாதாரம் பரிச்சயம்மில்லை.
ஆனாலும் உலக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நம் நாட்டின் அன்றாட வாழ்வில் சிரு சிக்கலை எற்படுத்தலாம்.
கிரீஸ் நாடு உலக வங்கியில் கடன் வாங்க அரசுப் ப்ணியில் ஆட்குறைப்பு செய்துள்ளது.(மக்களின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டூலக வங்கி கடன் தர ஒப்புக்கொண்டுள்ளது)கிட்ட தட்ட25% அரசுபணியாளர்கள் நிக்கப் பட்டுள்ளனர்.ஆனால் இன்றைய அன்னாட்டின் நிலைமக்களின் கோபத்தால் நாடு த்ழுவிய மாபெரும் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என்று போராட்டத்தில் ஸ்தம்பித்துள்ளது.(கடன் கிடைத்தபிறகு மக்களின் பொருளாதாரம் உயருமா?)
   அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.மற்ற நாடுகளில் கலவரங்கள் ஏற்படுகின்றன. இந்தியா பன்மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.
 இதன் மூலமாக சிக்கனத்தையும், உழைப்பில் சிரத்தையும் தேவை என நமக்கு அறிவுருத்துகின்றது.

Thursday, September 22, 2011

என் பயணம்

நான் என்னைப் பற்றி
பொதுவாக இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆனால், இன்று என்னைப் பற்றி.

நான் பிறந்தது மதுரையில்,
வழர்ந்தது ஈரோட்டில் பத்தாவது  வரை படித்தேன்.
அதன் பிறகு வெல்டிங் வேலையை கற்றுக்கொண்டேன்.
 சில காலம் ஈரோட்டில்  பணி செய்து கொண்டிருக்கையில்,
கோவையில் ஜீவா
என்ற நண்பன் அழைத்ததால் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தேன்.
[வீடு க்ட்ட உதவும் மிசின்கள்]
அங்கு  வேலையை கற்றுக்கொண்டு பிறகு அருகில் வேறு கம்பெனியில்
நனும், ஜீவாவும் காண்டிராக்ட் எடுத்துப் பணி செய்தோம்.
[கடந்த ஒரு வருட காலமாக]
நல்ல பணம் சம்பாதித்தும்.சில குறைகள் இருந்து கொண்டிருந்தன.
பிறகு அப்பணியிலிருந்து விழகி இப்போதைய நிலவரப்படி
கேரளாவில் திருச்சூர்- கேச்சேரியில் ஒரு வாரமாக வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். இந்த ஊரினைப் பிடித்தாலும்
வீட்டிலிருந்து வெகுத் தொலைவில் இருப்பதால் கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளது.
என்னைப் பற்றி சுருக்கமாக உங்களிம் கூறி ஆருதல்
அடைகின்றேன்.
[உங்களுக்கும் தலைவலிக்குதா? sorry...]

Sunday, September 18, 2011

தற்காலிக செய்தி

ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

ஓவியர் ஹுசைன் வரைந்த ஓவியங்கள் 4.2 மில்லியன் டாலருக்கு ஏலம்விடப்பட்ட்து.


98 நாடுகளில் இந்தியாவைவிட பெட்ரோல் விலை மிக குறைவு.